வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 5வது டி20 போட்டியில் அர்ஷ்தீப் சிங்குக்கு பதிலாக இந்திய அணியில் புவனேஷ்வர் குமார் இணைந்துள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ள ஷாய் ஹோப் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.
லக்னோவில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஞ்சியில் நடந்த 2வது போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தூரில் நடைபெற்ற 3வது போட்டியில் இந்திய அணி 14 ரன் வித்தியாசத்தில் வென்றது. 3வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் 24 ரன் வித்தியாசத்தில் வென்று டி20 தொடரை 2-2 என சமனிலைக்கு கொண்டு வந்தது.
இரு அணிகளுக்கு இடையிலான 5-வது டி20 போட்டி பெங்களூருவில் நாளை நடைபெறுகிறது.
இந்திய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் காயம் காரணமாக அவதிப்பட்டு வருகிறார்.
இந்நிலையில், தோள் பட்டையில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்டு வரும் அர்ஷ்தீப் சிங்குக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் இந்திய அணியுடன் இணைகிறார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.