கிரிக்கெட்

போட்டி அட்டவணைகளால் பயிற்சிக்கு நேரம் கிடைப்பதில்லை: சஞ்சு சாம்சன் குமுறல்

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 5வது டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டது.

போட்டி அட்டவணைகளால் பயிற்சிக்கு போதிய நேரம் கிடைப்பதில்லை என விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனுமான சஞ்சு சாம்சன் பிசிசிஐயை சாடியுள்ளார்.

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் 2-2 என சமனில் முடிந்தது. மழை காரணமாக கடைசிப் போட்டி கைவிடப்பட்டது.

இதில் இந்திய விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனுமான சஞ்சு சாம்சன் முறையே 5 போட்டிகளில் 11, 82, 3, 56 மற்றும் 16 ரன்களை எடுத்தார்.

சஞ்சு சாம்சன் குமுறல்

இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் தொடர் குறித்து சஞ்சு சாம்சன் கூறியதாவது:

இந்தத் தொடர் முழுவதும் நிலவிய சூழலுக்குத் தங்களை மாற்றிக்கொள்வது தமக்கும் அணியின் மற்ற வீரர்களுக்கும் எவ்வளவு கடினமாக இருந்தது.

மொத்தம் 5 போட்டிகள் திட்டமிடப்பட்டிருந்தாலும், அணிக்கு ஒரே ஒரு பயிற்சி அமர்வு மட்டுமே கிடைத்தது.

ஒவ்வொரு போட்டிக்கும் வெவ்வேறு நகரங்களுக்குப் பயணம் செய்ய வேண்டியிருந்த சூழலில், எந்தவிதப் பயிற்சியும் இன்றி நேரடியாகக் களமிறங்க வேண்டியிருந்தது. அப்போது வீரர்கள் தங்கள் அனுபவத்தையே பயன்படுத்திக் கொண்டனர்.

பயிற்சிக்கு நேரமின்மை

உண்மையைச் சொல்லப்போனால், தற்போதைய போட்டி அட்டவணை அமைப்பைப் பார்க்கும்போது ​​பயிற்சி பெறுவதற்கோ அல்லது தயாராவதற்கோ போதிய நேரம் கிடைப்பதில்லை.

இத்தகைய சூழலில்தான் ஒரு வீரரின் அனுபவம் கைகொடுக்கிறது. மனதளவில் ஒரு நல்ல நிலையில் இருக்க முயற்சி செய்து, கிடைக்கும் நேரத்தை மிகச் சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். எங்களிடம் பேட்டிங் பயிற்சிக்கு ஒரே ஒரு நாள் மட்டுமே உள்ளது.

நியூசிலாந்து செல்லும் இந்திய அணி

நாங்கள் 20-ம் தேதி நியூசிலாந்து சென்றடைந்து, 21-ம் தேதி பயிற்சி மேற்கொண்டு 22-ம் தேதி போட்டியில் விளையாடுவோம்.

எனவே, இதுவரை நாங்கள் சிறப்பாகச் செய்த விஷயங்களைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல முயற்சிப்போம். அங்குள்ள சூழலுக்கு ஏற்ப நம்மை மாற்றிக்கொள்ளச் சிறிது காலம் தேவைப்படும் என்பதால், களமிறங்கியதும் முதல் இரண்டு அல்லது மூன்று பந்துகளை எதிர்கொண்டு சூழலைப் புரிந்துகொள்ள முயற்சிப்போம்.

அனுபவத்தின் மூலம் கற்றுக்கொண்ட பாடங்களைப் பின்பற்றி, அந்தச் சூழலுக்கு மதிப்பளித்து விளையாடுவோம் என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT