கிரிக்கெட்

2வது டி20 போட்டி: இலங்கையை வீழ்த்தி ஜிம்பாப்வே அபார வெற்றி

17.4 ஓவர்கள் தாக்குப்பிடித்த இலங்கை அணி 80 ரன்களில் ஆல் அவுட் ஆனது.இலங்கை தரப்பில் அதிகபட்சமாக கமில் மிஸ்ரா 20 ரன்கள் அடித்தார்.

இலங்கை - ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் 2-வது போட்டி ஹராரே மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இலங்கை அணி ஆரம்பம் முதலே ஜிம்பாப்வே பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது.

இதில் அதிகபட்சமாக, கமில் மிஸ்ரா (20 ரன்கள்), சரித் அசலன்கா (18 ரன்கள்) மற்றும் தசுன் ஷனகா (15 ரன்கள்) தவிர வேறு எந்த பேட்ஸ்மேனும் இரட்டை இலக்கை தொடவில்லை.

17.4 ஓவர்கள் தாக்குப்பிடித்த இலங்கை அணி 80 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

அபாரமாக பந்துவீசிய ஜிம்பாப்வே தரப்பில் பிராட் எவன்ஸ் மற்றும் சிக்கந்தர் ராசா தலா 3 விக்கெட்டுகளும், முசரபானி 2 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர்.

இதனையடுத்து 81 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஜிம்பாப்வே களமிறங்கியது.

இந்நிலையில், ஜிம்பாப்வே அணி 14.2 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்களை எடுத்து வெற்றிப் பெற்றது.

இதில், அதிகபட்சமாக டஷிங்கா முசேகிவா 21 ரன்களும், ரியான் பர்ல் 20 ரன்கள் எடுத்து இருவரும் அவுட் ஆகாமல் இருந்தார். தொடர்ந்து, பிரெயின் பென்னட் 19 ரன்களும், தடிவானாஷே மருமணி 17 ரன்களும் எடுத்து அவுட் ஆகினர்.

துஷ்மந்தா சமீரா அதிகட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

SCROLL FOR NEXT