கிரிக்கெட்

இந்தியா - நியூசிலாந்து முதலாவது டெஸ்ட் போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு

இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரிஷப் பண்ட் இடம்பெற்றுள்ளனர்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரை 3-2 என்ற கணக்கிலும், ஒரு நாள் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.அடுத்ததாக இந்தியா-நியூசிலாந்து இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடத்தப்படுகிறது.

இதன்படி முதலாவது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் உள்ள பேசின்ரிசர்வ் ஸ்டேடியத்தில் தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சு தேர்வு செய்துள்ளார்.

அணி விவரம்:

சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியில் கே.எல். ராகுல், ஜெய்ஸ்வால், தேவ்தத் படிக்கல், துருவ் ஜூரெல் மற்றும் ரிஷப் பண்ட் என திறமையான பேட்டர்கள் உள்ளனர். வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா காயத்தில் இருந்து குணமடைந்து அணிக்கு திரும்பி இருப்பது பலமாகும். மேலும், ஆகாஷ் தீப், அன்ஷூல் கம்போஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோரும் தாக்கத்தை ஏற்படுத்த ஆவலுடன் உள்ளனர்.

டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து அணி உள்ளூரில் எப்போதும் வலுவானது. டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, டெவான் கான்வே, டாம் பிளென்டல், வில் யங் ஆகியோர் பேட்டிங்கிலும், மேட் ஹென்றி, கைல் ஜாமிசன், நாதன் சுமித் ஜேக்கப் டப்பி உள்ளிட்டோர் பந்து வீச்சிலும் மிரட்டக்கூடியவர்கள். இதனால் இந்தியாவுக்கு கடும் சவால் காத்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

SCROLL FOR NEXT