இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி லண்டனின் ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. 4-ம் நாளான இன்று இங்கிலாந்து அணி வெற்றிபெற 463 ரன்களை இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து.
இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கி விளையாடி வருகிறது.
இந்நிலையில், இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரரான ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 14,000 ரன்களை நிறைவு செய்த 2-வது பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
ஓவல் மைதானத்தில் நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்டின் நான்காவது நாளில் 2-வது ரன்னை எடுத்தபோது இந்த மைல்கல்லை எட்டினார்.
ஜோ ரூட் தனது 165-வது போட்டியில் (302 இன்னிங்ஸ்) 14,000 ரன்களை கடந்துள்ளார். 41 சதங்கள் மற்றும் 66 அரை சதங்கள் எடுத்துள்ளார்.
இந்தியாவின் சச்சின் டெண்டுல்கரின் 15,921 ரன்கள் என்ற சாதனையை நெருங்க ஜோ ரூட்டுக்கு இன்னும் 1921 ரன்கள் தேவை.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களில் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார். அவர் 200 போட்டிகளில் 15,921 ரன்கள் எடுத்துள்ளார். ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் 168 போட்டிகளில் 13,378 ரன்னும், ஜாக் காலிஸ் 166 போட்டிகளில் 13,289 ரன்னும், ராகுல் டிராவிட் 164 போட்டிகளில் 13,288 ரன்னும் எடுத்துள்ளனர்.