சீனா ஓபன் பேட்மிண்டன் தொடர் அங்குள்ள சாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் இந்தியா சார்பில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் லக்சயா சென், கனடாவின் விக்டர் லாய் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய விக்டர் லாய் 21-19, 21-11 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
இதன்மூலம் இந்தியாவின் நட்சத்திர வீரரான லக்சயா சென் 2வது சுற்றில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
முன்னதாக, இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய், தேவிகா சிஹாக் ஆகியோர் முதல் சுற்றிலும், ஆயுஷ் ஷெட்டி, பி.வி.சிந்து 2வது சுற்றிலும் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினர்.