ஆசிய தடகள சங்கத்தின் உயர்மட்ட குழு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றது. இதில் இந்திய அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதேபோன்று தமிழ்நாடு தடகள சங்கத்தின் உயர் அதிகாரி சி. லதா கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி இந்தியா சார்பில் சென்னையில் நடத்த விருப்பம் கோரப்பட்டது. அதற்கு உயர்மட்ட குழுவும் சம்மதம் தெரிவித்துள்ளது.
ஆனால் நிதி மற்றும் மற்ற உத்தரவாதங்களை தமிழ்நாடு அரசு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. புதன்கிழமை அதாவது நாளை தமிழக அரசு சார்பில் உத்தரவாதம் அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாங்கள் விளக்கக்காட்சியைச் சமர்ப்பித்தோம். மாநில அரசிடமிருந்து நிதி மற்றும் பிற உத்தரவாதங்களைப் பெற்றுத் தருமாறு ஆசிய தடகளச் சங்கம் (AAA) எங்களிடம் கேட்டுள்ளது. அந்த உத்தரவாதங்கள் கிடைத்தவுடன், 2029-ம் ஆண்டுக்கான ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியை நடத்தும் உரிமையை சென்னைக்கு வழங்குவதாக ஆசிய தடகளச் சங்கம் தெரிவித்துள்ளது.
எங்கள் மாநில அரசிடமிருந்து நாளை உத்தரவாதங்களை பெறுவோம் என்று நம்புகிறோம். எனவே, இறுதி முடிவு நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறோம் என்று லதா தெரிவித்துள்ளார்.