ஐபிஎல் 2026 தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரின் இன்றைய 37வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதி வருகின்றன. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 158 ரன்கள் குவித்தது. முதல் 5 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை இழந்த சென்னை அணி, மிடில் ஓவர்களில் ரன்களை குவிக்க முடியாமல் 15 ஓவர்கள் வரையும் வெறும் 96 ரன்களிலேயே இருந்தது.
15.3 ஓவர்களில் துபே ஆட்டமிழக்க அடுத்தடுத்து வந்த கார்த்திக் சர்மா, ஜேமி ஓவர்டன் அதிரடியாக தொடங்கினர். இருப்பினும் இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனிடையே அவுட் ஆகாமல் ஒருபக்கம் ஆட்டத்தை தொடர்ந்து வந்த அணியின் கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் கடைசியில் கொஞ்சம் அதிரடி காட்ட ஒருவழியாக 20 ஓவர்களின் முடிவில் 150ஐ தாண்டியது சென்னை அணி.
இதனைத்தொடர்ந்து குஜராத் 159 ரன்களை இலக்காக கொண்டு விளையாட உள்ளது. சென்னை தரப்பில் அதிகபட்சமாக ருதுராஜ் கெய்க்வாட் 74 ரன்கள் குவித்தார். குஜராத் தரப்பில் ரபாடா 3 விக்கெட்டுகளும், அர்ஷத் கான் 2 விக்கெட்டுகளும், சிராஜ், சுதர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.