கேண்டிடேட்ஸ் செஸ் 12-வது சுற்றுப் போட்டியில் மகளிர் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய கிராண்ட் மாஸ்டர் வைஷாலி, சீன வீராங்கனை ஜினர் ஜூ உடனான போட்டியில் தோற்றார்.
கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிகள் சைப்ரஸ் நாட்டின் பாபோஸ் நகரில் நடந்து வருகின்றன. இதில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனை, நடப்பு சாம்பியன்களுடன் மோதி, அடுத்த சாம்பியன் ஆகும் வாய்ப்பு பெறுவர்.
மகளிர் பிரிவு 12-வது சுற்றுப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வீராங்கனை வைஷாலி, சீன வீராங்கனை ஜினர் ஜு உடன் மோதினார். இதில் சிறப்பாக ஆடிய சீன வீராங்கனை வைஷாலியை தோற்கடித்தார்.
ஆனாலும், நடப்பு சீசனில் வைஷாலி 4 வெற்றிகளுடன் 7 புள்ளிகள் பெற்று ஜினர் ஜூவுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். இன்னும் 2 போட்டிகள் மீதமுள்ளன.