விளையாட்டு

கேண்டிடேட்ஸ் செஸ்: 3-வது சுற்றில் பிரக்ஞானந்தா தோல்வி

இந்திய கிராண்ட்மாஸ்டரான தமிழகத்தின் பிரக்ஞானந்தா, உஸ்பெகிஸ்தான் வீரர் ஜவோகிர் சிந்தாரோவுடன் மல்லுக்கட்டினார்.

பெஜியா:

உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் நடப்பு சாம்பியனுடன் மோதும் வீரர். வீராங்கனையை தேர்வு செய்வதற்கான கேண்டிடேட்ஸ் செஸ் தொடர் சைப்ரஸ் நாட்டில் நடந்து வருகிறது.

ஆண்கள் பிரிவில் பங்கேற்றுள்ள 8 வீரர்கள் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதலிடத்தை பிடிக்கும் வீரர் பட்டத்தை வெல்வதுடன் உலக செஸ் சாம்பியன்ஷிப்புக்கும் தகுதி பெறுவார்.

நேற்று 3-வது சுற்று ஆட்டங்கள் நடந்தன. இந்திய கிராண்ட்மாஸ்டரான தமிழகத்தின் பிரக்ஞானந்தா, உஸ்பெகிஸ்தான் வீரர் ஜவோகிர் சிந்தாரோவுடன் மல்லுக்கட்டினார். வெள்ளை நிற காய்களுடன் ஆடிய பிரக்ஞானந்தா 40-வது நகர்த்தலில் தோல்வி கண்டார்.

இன்னொரு ஆட்டத்தில் அமெரிக்க வீரர் பேபியானா கருணா 19-வது காய் நகர்த்தலில் சீனாவின் வெய்யியை வீழ்த்தினார். 3-வது சுற்று முடிவில் பேபியானா கருணா, ஜவோகிர் சிந்தா ரோவ் தலா 2% புள்ளிகளுடன் முன்னிலை வகிக்கின்றனர்.

இதன் பெண்கள் பிரிவில் தமிழகத்தின் ஆர்.வைஷாலி, உக்ரைனின் அன்னா முசிசுக்குடன் மோதினார். இந்த ஆட்டம் 41-வது நகர்த்தலில் டிராவில் முடிந்தது.