ஆஸ்திரேலியா ஓபன் பேட்மிண்டன் நாளை தொடங்க இருக்கிறது. அதற்கு முன்னதாக தகுதிச் சுற்று போட்டிகள் நடைபெற்றன. குதிச் சுற்றுக்கான போட்டியில் தரநிலை 4 பெற்றிருந்த இந்திய வீரரான சனீத் தயானந்த் 21-17, 21-15 என்ற கேம் கணக்கில் ஆஸ்திரேலிய வீரர் கரோனோவை வீழ்த்தினார். அதன்பின் மலேசியாவைச் சேர்ந்த மிங் ஹாங் லிம்மை 21-9, 21-16 என வீழ்த்தி முதன்மை சுற்றுக்கு முன்னேறினார்.
இவர் ஆஸ்திரேலியா ஓபன் முதல் சுற்றில் சீனாவைச் சேர்ந்த ஹு செ-வை எதிர்கொள்கிறார். மற்றொரு மன்ராஜ் சிங் தகுதிச் சுற்றுக்கான 2-வது சற்றில் மலேசிய வீரரிடம் 11-21, 18-21 என தோல்வியடைந்தார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் பி.வி. சிந்து விளையாட இருக்கிறார்.