சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஆயுஷ் ஷெட்டி ஆகியோர் விலகியுள்ளனர்.
சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் சீனாவில் உள்ள ஷென்சென் நகரில் வரும் 1-ம் தேதி தொடங்குகிறது. இந்தத் தொடர் 6-ம் தேதியுடன் முடிவடைகிறது.
இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிவி சிந்து, ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஆயுஷ் ஷெட்டி ஆகியோர் காயத்தால் இந்தத் தொடரில் இருந்து விலகி உள்ளனர்.
கடந்த வாரம் நடந்த உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடரின் 3வது சுற்றில் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.