43-வது ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் நிங்போ நகரில் நேற்று தொடங்கியது. இந்தத் தொடர் வரும் 12-ம் தேதி வரை நடக்கிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, சீனாவின் லீ ஷிபெங் உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய ஆயுஷ் ஷெட்டி 21-13, 21-16 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.