விளையாட்டு

அமெரிக்காவில் நடைபெற்ற 5 கி.மீ ஓட்டப்பந்தயத்தில் சாதனை படைத்த குல்வீர் சிங்

ஆண்களுக்கான திறந்தவெளி ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவை சேர்ந்த வீரர் வெள்ளி பதக்கம் வென்றார்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள சவுண்ட் ரன்னிங் ட்ராக்கில் ஆண்களுக்கான ஐந்து கிலோமீட்டர் திறந்தவெளி ஓட்டப்பந்தயம் நடைபெற்றது.

இந்த போட்டியில் கலந்துகொண்ட இந்திய வீரர் குல்வீர் சிங், 13:03.93 நிமிடங்களில் இலக்கை அடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

மேலும் இது வரலாற்று சாதனையாக அமைந்துள்ளதாக இந்திய தடகள கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த போட்டியில் கலந்துகொண்ட நியூ மெக்சிகோவின் ஹப்டோம் சாமுவேல் 12:57.22 நிமிடங்களில் இலக்கை அடைந்து முதலிடத்தை பெற்றார்.