விளையாட்டு

ஆசிய துப்பாக்கிச் சுடுதல்: தங்கம் வென்றார் இந்திய வீரர் தோமர்

ஆசிய சாம்பியன்ஷிப் துப்பாக்கிச் சுடுதல் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது.இதில் இந்தியாவின் பிரதாப் சிங் தோமர் தங்கப் பதக்கம் வென்றார்.

மாலை மலர்

புதுடெல்லி:

தலைநகர் டெல்லியில் ஆசிய சாம்பியன்ஷிப் துப்பாக்கிச் சுடுதல் போட்டிகள் நடந்து வருகின்றன.

ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் 3 நிலைகள் போட்டியில் இந்திய வீரர் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் சிறப்பாக செயல்பட்டு தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.

இந்தப் போட்டியில் இந்திய வீரர்கள் நீரஜ் குமார் வெள்ளியும், அகில் ஷியரோன் வெண்கலப் பதக்கங்களும் பெற்றனர்.

இந்த 3 இந்திய வீரர்களும் குழு போட்டியில் 1769 புள்ளிகளுடன் தங்கம் வென்றனர்.