விளையாட்டு

Asian para games: வட்டு எறிதலில் வெற்றி.. இந்தியாவுக்கு 15வது தங்கம் - புள்ளிப்பட்டியலில் 4ஆம் இடத்திற்கு முன்னேற்றம்

நடப்பு தொடரில் சீனா 227 பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது.

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிக: சுவர்ணா ராஜ், இந்தியாவுக்கு 15வது தங்கப் பதக்கத்தை பெற்றுத் தந்தார்.

2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானில் அயிச்சி நகோயா நகரில் கடந்த 18 ஆம் தேதி முதல் நடந்து வருகின்றன. வரும் 24ஆம் தேதி வரை பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற உள்ளன.

இந்நிலையில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான F54 வட்டு எறிதல் (Discus Throw) பிரிவில் 15.66 மீட்டர் தூரம் எறிந்து, சுவர்ணா ராஜ், இந்தியாவுக்கு 15வது தங்கப் பதக்கத்தை பெற்றுத் தந்தார்.

ஈரானின் ஷஹ்லா ஹதிதி 15.45 மீட்டர் தூரம் எறிந்து இரண்டாம் இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். இந்த தூரம் அவரின் சாதனை அளவாகும்.

வில்வித்தை

வில்வித்தைப் W1 மகளிர் தனிநபர் பிரிவின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் சுவாதி சௌத்ரி வெள்ளிப் பதக்கம் வென்றார். சுவாதியுடன் போட்டியிட்ட சீனாவின் மெய்க்கான் சென் 6-4 என்ற கணக்கில் தங்கம் வென்றார்.

சீனா முதலிடம் - இந்தியா 4ஆம் இடம்

நடப்பு தொடரில் சீனா 227 பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது. இதில் 108 தங்கம், 62 வெள்ளி மற்றும் 57 வெண்கலப் பதக்கங்கள் அடங்கும்.

உஸ்பெகிஸ்தான் 30 தங்கப் பதக்கங்கள் உட்பட 90 பதக்கங்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.

போட்டியை நடத்தும் ஜப்பான் மூன்றாம் இடத்தில் உள்ளது. 15 தங்கப் பதக்கங்கள், 22 வெள்ளிப் பதக்கங்களை பெற்று இந்தியா புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

தென் கொரியாவும் 15 தங்கப் பதக்கங்களையும், 14 வெள்ளிப் பதக்கங்களையும் பெற்றுள்ளது.

SCROLL FOR NEXT