ஆசிய விளையாட்டு ஸ்குவாஷ் பெண்கள் பிரிவில் இந்திய அணி சீனா (2-1), ஜப்பான் (2-1), ஈரான் (3-0) ஆகியவற்றை வீழ்த்தி கால் இறுதிக்கு தகுதி பெற்றது.
இன்று நடைபெற்ற கால்இறுதியில் இந்திய பெண்கள் ஸ்குவாஷ் அணி சிங்கப்பூரை எதிர்கொண்டது.
இதில் இந்தியா 2-0 என்ற கணக்கில் வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றது. இதன் மூலம் பதக்கம் உறுதியானது.
ஏற்கனவே ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவுக்கு 3 பதக்கம் வென்றது. முதல் ஆட்டத்தில் தன்வி கண்ணா போராடி 11-6, 4-11, 15-13, 11-1 என்ற கணக்கில் ஆவ் யோங் வாய் ஐன்னை தோற்கடித்தார்.
2- வது போட்டியில் அனஹத் சிங் 11-7, 11-3, 11-4 என்ற நேர் செட் கணக்கில் ஆவ் யங்கை வீழ்த்தினார்.
இந்திய அணி மோதும் அரை இறுதி ஆட்டம் நாளை நடக்கிறது. ஆண்கள் பிரிவில் இந்திய அணி கால் இறுதியில் இன்று குவைத்தை எதிர் கொள்கிறது.