விளையாட்டு

ஆசிய விளையாட்டு: டேபிள் டென்னிசில் வெண்கலம் வென்ற இந்தியா

இந்திய அணி இன்று ஒரு வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.

ஆசிய விளையாட்டு போட்டியில் டேபிள் டென்னிசில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மனுஷ் ஷா - தியா சிதாலே ஜோடி வெண்கலப் பதக்கம் வென்றது.

ஆசிய விளையாட்டு போட்டியின் டேபிள் டென்னிசில் கலப்பு இரட்டையர் பிரிவில் அரையிறுதி போட்டி இன்று நடைபெற்றது.

இதில் இந்தியாவின் மனுஷ் ஷா - தியா சிதாலே ஜோடி, சீனாவின் வாங் சிகுயின் - சன் யிங்ஷா ஜோடி உடன் மோதியது.

மனுஷ் ஷா - தியா சிதாலே ஜோடி தொடக்கம் முதலே போராடியது. சீனா ஜோடி கடும் சவால் அளித்தது.

இறுதியில் சீன ஜோடி 11-8, 11-5, 11-8, 11-2 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இதன்மூலம் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியா வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றியது.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா இதுவரை 2 தங்கம், 8 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 20 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

SCROLL FOR NEXT