ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானில் நடைபெற்று வருகிறது. இந்திய வீரர்கள் வீராங்கனைகள் பங்கேற்ற தடகள போட்டிகள் இன்றுடன் நிறைவடைந்துள்ளன. இதில் இந்தியா ஒரு தங்கம், 9 வெள்ளி, 14 வெண்கலத்துடன் மொத்தம் 24 பதக்கங்கள் பெற்றுள்ளன.
என்றாலும் கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டை பொறுத்தவரையில் குறைவானதாகும். 22-ம் ஆண்டு 6 தங்கம், 14 வெள்ளி, 9 வெண்கல பதக்கங்களுடன் 29 பதக்கங்கள் வென்றிருந்தது.
மொத்தமாக இந்தியா இதுவரை 6 தங்கம், 21 வெள்ளி, 25 வெண்கல பதக்கங்களுடன் 52 பதக்கங்கள் பெற்று 10-வது இடத்தில் உள்ளது.
சீனா 143 தங்கம், 62 வெள்ளி, 49 வெண்கலத்துடன் மொத்தம் 254 பதக்கங்கள் வென்று முதல் இடத்தில் உள்ளது. ஜப்பான் 45 தங்கம், 71 வெள்ளி, 67 வெண்கலகத்துடன் மொத்தம் 183 பதக்கங்கள் வென்று 2-வது இடத்தில் உள்ளது. கொரியா 3-வது இடத்திலும், உஸ்பெகிஸ்தான் 4-வது இடத்திலும், தாய்லாந்து 5-வது இடத்திலும் உள்ளன.