ஆசிய விளையாட்டு போட்டி ஹாக்கியில் `ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ள இந்தியா இன்று இலங்கையை எதிர்கொண்டது. இதில் இந்தியா கோல் மழை மொழிந்தது. 60 நிமிடத்தில் 16 கோல்கள் அடித்தன. இலங்கை அணியால் ஒரேயொரு கோல் மட்டுமே அடிக்க முடிந்தது.
இந்தியாவின் ஜுக்ராஜ் சிங் அதிகபட்சமாக 4 கோல்கள் அடித்தார். அபிஷேக் மற்றும் தில்ப்ரீத் சிங் தலா 3 கோல்களும், ஹர்மன்ப்ரீத் சிங் 2 கோல்களும், விவேக் சாகர் பிரசாத், சுக்ஜீத் சிங், மந்தீப் சிங் ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர்.
இலங்கை அணி சார்பில் சுரேஷ் ரத்னநாயகே ஆறுதலாக ஒரு கோல் அடித்தார்.