கொரியா மாஸ்டர்ஸ் பேட்மின்டன் தொடர் கொரியாவில் நடந்து வருகிறது.
இன்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் இந்திய வீராங்கனை அஷ்மிதா சலிஹா, சீன வீராங்கனையான ஹான் குயான்சி உடன் மோதினார்.
தொடக்கத்தில் சிறப்பாக ஆடிய அஷ்மிதா சலிஹா முதல் செட்டை 14-21 என இழந்தார். இதனால் சுதாரித்துக் கொண்ட அஷ்மிதா சலிஹா அதிரடியாக ஆடி 2வது செட்டை 21-14 என கைப்பற்றினார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் சிறப்பாக ஆடிய அஷ்மிதா சலிஹா 21-14 என வென்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
கடந்த வாரம் நடந்த தைபே ஓபன் பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் இந்தியாவின் தன்வி ஷர்மா சாம்பியன் பட்டம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீப காலமாக இந்திய வீராங்கனைகள் பேட்மிண்டன் தொடரில் சிறந்து விளங்கி வருவது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.