விளையாட்டு

Malaysia Masters: காலிறுதிக்கு முன்னேறினார் அஷ்மிதா

இந்தியாவின் மாளவிகா பன்சோத் 2வது சுற்றில் தோல்வி அடைந்தார்.

மலேசியா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது.

இதில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் அஷ்மிதா சலிஹா, மலேசியாவின் கோ ஜின் வெய் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய அஷ்மிதா 21-13, 21-16 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் இந்தியாவின் மாளவிகா பன்சோத் 21-16, 8-21, 15-21 என்ற செட் கணக்கில் டென்மார்க்கின் லைன் கெயர்பெல்டிடம் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.