விளையாட்டு

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் அஷ்மிதா சலிஹா வெற்றி

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் ஹாங்காங்கில் நடந்து வருகிறது.

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடரின் முதல் சுற்றில் இந்தியாவின் அஷ்மிதா சலிஹா வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் ஹாங்காங்கில் நடந்து வருகிறது.

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் அஷ்மிதா சலிஹா, சக நாட்டு வீராங்கனையான இஷா பரூவா உடன் மோதினார்.

சிறப்பாக ஆடிய இஷா பரூவா முதல் செட்டை 21-12 என வென்றார்.

இதில் சுதாரித்துக் கொண்ட அஷ்மிதா சலிஹா அதிரடியாக ஆடி அடுத்த இரு செட்களை 21-13, 21-12 என கைப்பற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

மற்ற போட்டிகளில் இந்தியாவின் அன்மோல் கார்ப், உன்னதி ஹூடா ஆகியோர் அதிர்ச்சி தோல்வி அடைந்தனர்.

SCROLL FOR NEXT