சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையரில் பிரான்சின் அர்னாடு மெர்கில் சாம்பியன் பட்டம் வென்றார்.
சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டி உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் நடந்து வருகிறது.
இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிச்சுற்றில் பிரான்சின் அர்னாடு மெர்கில், இந்தோனேசியாவின் ரிச்சர்டோ உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய அர்னாடு மெர்கில் 21-15, 21-17 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.
பெண்கள் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் இந்திய அணி விளையாட உள்ளது.