விளையாட்டு

ஆசிய விளையாட்டு: மல்யுத்தத்தில் வெள்ளி, வெண்கலம் வென்ற இந்திய வீரர்கள்

மல்யுத்தத்தில் இந்தியாவின் அமன் ஷெராவத் தங்கம் வென்றார்.

ஆசிய விளையாட்டு போட்டியின் மல்யுத்தத்தில் இந்தியாவின் அந்திம் பங்கால் வெள்ளியும், தீபக் புனியா வெண்கலப் பதக்கமும் வென்று அசத்தினர்.

ஆசிய விளையாட்டு போட்டிகள் ஜப்பானில் நடந்து வருகிறது. இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் தங்களது அபார திறமையால் தொடர்ந்து பதக்கங்களைக் குவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மல்யுத்தத்தில் பெண்கள் 53 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் அந்திம் பங்கால் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

அந்திம் பங்கால் இறுதிப்போட்டியில் ஜப்பான் வீராங்கனையிடம் 1-9 என்ற கணக்கில் வீழ்ந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

இதேபோல், ஆண்கள் 97 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் தீபக் புனியா மங்கோலிய வீரரை தோற்கடித்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

SCROLL FOR NEXT