விளையாட்டு

கொரியா ஓபன் பேட்மிண்டன்: 2வது சுற்றில் இந்தியாவின் அன்மோல் கர்ப் தோல்வி

கொரியா ஓபன் சர்வதேச பேட்மிண்டன் தொடர் தென் கொரியாவில் நடந்து வருகிறது.

கொரியா ஓபன் பேட்மிண்டன் தொடரின் 2வது சுற்றில் இந்தியாவின் அன்மோல் கர்ப் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

கொரியா ஓபன் சர்வதேச பேட்மிண்டன் தொடர் தென்கொரியாவில் உள்ள யோசு நகரில் நடந்து வருகிறது.

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் அன்மோல் கர்ப், ஜப்பானின் அகானே யமாகுச்சி உடன் மோதினார்.

இதில் அதிரடியாக ஆடிய ஜப்பான் வீராங்கனை 21-18, 21-18 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

இதன்மூலம் இந்தியாவின் அன்மோல் கர்ப் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

மற்றொரு போட்டியில் இந்தியாவின் தன்வி ஷர்மா தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

SCROLL FOR NEXT