விளையாட்டு

Macau Open பேட்மிண்டன்: காலிறுதிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனைகள்

மக்காவ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சீனாவில் நடந்து வருகிறது.

மக்காவ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சீனாவில் நடந்து வருகிறது.

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 2வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் அஷ்மிதா சலிஹா, அமெரிக்காவின் இஷிகா ஜெய்ஸ்வால் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய அஷ்மிதா சலிஹா 22-20, 21-15 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் இந்திய வீராங்கனை அன்மோல் கர்ப் முதல் செட்டில் 12-4 என முன்னிலை பெற்றிருந்தார். அப்போது மலேசிய வீராங்கனை போட்டியில் இருந்து விலகியதால் அன்மோல் கர்ப் காலிறுதிக்கு முன்னேறினார்.