ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் மாநிலங்களுக்கு இடையிலான 65-வது தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது.
நேற்று நடந்த பெண்களுக்கான நீளம் தாண்டுதல் போட்டியில் கேரள வீராங்கனை ஆன்சி சோஜன் 6.88 மீட்டர் தூரம் தாண்டி புதிய சாதனை படைத்து தங்கம் வென்றார். இதன்மூலம் அவர் ஆசிய போட்டிக்கும் தகுதி பெற்றார்.
இதுதொடர்பாக அஞ்சு பாபி ஜார்ஜ் கூறுகையில், எனது 22 வருட நீளம் தாண்டுதல் சாதனையை முறியடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
இப்போது யாரோ ஒருவர் வந்து என் சாதனையை முறியடித்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என தெரிவித்தார்.
இதற்குமுன், 2004-ம் ஆண்டு ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் அஞ்சு ஜார்ஜ் 6.83 மீட்டர் தாண்டியதே தேசிய சாதனையாக இருந்தது.
கடந்த 22 ஆண்டாக நீடித்த இந்த சாதனையை ஆன்சி சோஜன் தற்போது முறியடித்து அசத்தியுள்ளார்.