கொரியா ஓபன் பேட்மிண்டன் தொடரில் தென்கொரியாவின் ஆன் சே-யங் சாம்பியன் பட்டம் வென்றார்.
கொரியா ஓபன் சர்வதேச பேட்மிண்டன் தொடர் தென்கொரியாவில் உள்ள யோசு நகரில் நடந்தது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் தென்கொரியாவின் ஆன் சே-யங், ஜப்பானின் அகானே யமாகுச்சி உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய ஆன் சே-யங் முதல் செட்டை 21-12 என வென்றார்.
இதற்கு பதிலடியாக ஜப்பான் வீராங்கனை 2வது செட்டை 21-15 என கைப்பற்றினார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை ஆன் சே-யங் 21-16 என வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.