விளையாட்டு

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் சுழற்பந்துவீச்சு பயிற்சியாளராக அமித் மிஸ்ரா நியமனம்!

ஐபிஎல் வரலாற்றில் மூன்று ஹாட்ரிக் எடுத்த ஒரே வீரர்.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சுப் பயிற்சியாளராக அமித் மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன்மூலம் சவுரங் கங்குலி, யுவராஜ் சிங், சமிந்த வாஸ் ஆகியோரோடு டெல்லி பயிற்சி அணியில் இணைந்துள்ளார்.

சுழற்பந்து வீச்சாளரான இவர், 2008-ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் ஐபிஎல் தொடரில் தொடங்கி, 16 சீசன்களில் 162 போட்டிகளில் விளையாடி, 174 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். டெல்லி அணிக்காக 10 சீசன்களாக விளையாடியுள்ளார்.

ஐபிஎல் வரலாற்றில் மூன்று ஹாட்ரிக் எடுத்த ஒரே வீரர் என்ற பெருமையை பெற்றுள்ள மிஸ்ரா கடைசியாக 2024-ம் ஆண்டு சீசனில் விளையாடினார்.

SCROLL FOR NEXT