ஹாக்கி
விளையாட்டு

அகில இந்திய ஆக்கி போட்டி: இந்திய கடற்படை அணி வெற்றி

இந்திய ராணுவம் 5-2 என்ற கோல் கணக்கில் இந்திய விளையாட்டு ஆணைய அணியை தோற்கடித்தது.

எம்.சி.சி.- முருகப்பா தங்கக் கோப்பைக்கான அகில இந்திய ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடிடயத்தில் நடைபெற்று வருகிறது.

நேற்று நடந்த ‘பி’ பிரிவு ஆட்டம் ஒன்றில் இந்திய ராணுவம் 5-2 என்ற கோல் கணக்கில் இந்திய விளையாட்டு ஆணைய அணியை தோற்கடித்தது.

ரெயில்வே அணி வெற்றி

‘ஏ’ பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் ரெயில்வே 3-0 என்ற கோல் கணக்கில் ஐ.ஓ.சி.யை வீழ்த்தியது. இதே பிரிவில் கர்நாடகா- பஞ்சாப் நேஷனல் அணிகள் மோதிய ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் ‘டிரா’ ஆனது.

இன்றைய ஆட்டங்களில் பாரத் பெட்ரோலியம்- இந்திய விளையாட்டு ஆணையம், தமிழ்நாடு- இந்திய கடற்படை அணிகள் மோதுகின்றன.

SCROLL FOR NEXT