அபிநயா ராஜராஜன்
விளையாட்டு

சென்னையில் தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப்: அபிநயா ராஜராஜன் அசத்தல்

பெண்களுக்கான 100 மீ ஓட்டத்தில் முந்தைய சாதனையை முறியடித்தார் அபிநயா.

தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. இதில் 20 வயதிற்கு உட்பட்டோருக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த அபிநயா ராஜராஜன் தங்கம் வென்றார். இவர் ஏற்கனவே 11.54 விநாடிகளில் கடந்த சாதனைப் படைத்திருந்தார். கடந்த வருடம் கொச்சியில் படைத்த சாதனையை தற்போது 11.49 விநாடிகளில் கடந்து தனது முந்தைய சொந்த சாதனையை முறியடித்துள்ளார்.

18 வயதிற்கு உட்பட்டோருக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் நீல் சாம்ராஜ் 10.45 விநாடிகளில் கடந்து சாதனைப் படைத்துள்ளார். இதற்கு முன்னதாக லூதியானாவில் நடைபெற்ற போட்டியில் 10.46 விநாடிகளில் கடந்திருந்தார்.

20 வயதிற்கு உட்பட்டோருக்கான வட்டு எறிதலில் பஞ்சாப் வீராங்கனை அமநாத் கம்போஜ் 51.44 மீட்டர் எறிந்து தங்கம் வென்றார். 51.40 மீட்டர் எறிந்து உத்தர பிரதேசம் வீராங்கனை சுப்ரியா அத்ரி வெள்ளிப் பதக்கம் வென்றார்.

20 வயதிற்கு உட்பட்டோருக்கான 5000 மீ ஓட்டத்தில் மகாராஷ்டிரா வீரர் அபிநந்தன் சூர்யவன் 14:32.08 நேரத்தில் கடந்த தங்கம் வென்றார்.

20 வயதிற்கு உட்பட்டோருக்கான பெண்களுக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் கர்நாடக மாநில வீராங்கனை தமன்னா தங்கம் வென்றார்.

SCROLL FOR NEXT