விளையாட்டு

செஸ் போட்டியில் கலக்கிய சாதனை நாயகனுக்கு ரூ.78.5 லட்சம் பரிசுத் தொகை

குகேஷ் தனது 12 வயதில் சாதாரண மாஸ்டர் பட்டத்தை வென்றார். 17 வயதில் கேன்டிடேட் போட்டியில் பட்டம் வென்று இளம் வீரர் என்ற வரலாற்றினை படைத்தார்.

மாலை மலர்

கேன்டிடேட் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீரர் குகேசுக்கு ரூ.78.5 லட்சம் பரிசுத் தொகை கிடைத்தது.

குகேஷ் தனது 12 வயதில் சாதாரண மாஸ்டர் பட்டத்தை வென்றார். இதன் மூலம் இளம் வயதில் கிராண்ட் மாஸ்டரான உலகின் 3-வது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். தற்போது 17 வயதில் கேன்டிடேட் போட்டியில் பட்டம் வென்று இளம் வீரர் என்ற வரலாற்றினை படைத்தார்.

மேலும் உலக செஸ் சாம்பியன் போட்டியில் விளையாடும் இளம் வீரர் என்ற புதிய வரலாற்றையும் படைத்துள்ளார்.