நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5டி20, 5 ஒருநாள் போட்டி, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது.
இதில் டி20 தொரை 3-2 என்ற கணக்கில் இந்திய கைப்பற்றிய நிலையில், ஒருநாள் தொடர் தொடங்கி நடைபெற்றது. ஒருநாள் தொடரின் கடைசி மற்றும் 5வது போட்டி இன்று நியூசிலாந்தின் மவுண்ட் மவுங்கானுய் மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா 43 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 209 ரன்கள் குவித்தது.
தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணி 49 ஓவர்களிலேயே 187 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதன்மூலம் 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது இந்தியா.
தொடர்ந்து டெஸ்ட் தொடர் நவ.19ம் தேதி தொடங்க உள்ளது.