விளையாட்டு

நாளை 4வது டி20 போட்டி: நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணியின் அதிரடி தொடருமா?

கடந்த 3 ஆட்டத்திலும் இந்தியாவின் பேட்டிங் சிறப்பாக இருந்தது.

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 5 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் 3 ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி தொடரை கைப்பற்றியது.

அதிரடி தொடருமா?

கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற முதல் 2 ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்திலும், வெல்லிங்டனில் நடந்த

3-வது போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்திலும் நியூசிலாந்தை வீழ்த்தியது. இதன் மூலம் 3-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் 4-வது 20 ஓவர் ஆட்டம் ஆக்லாந்து மைதானத்தில் நாளை (30-ந்தேதி) நடக்கிறது. ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான இந்திய அணியின் அதிரடி தொடர்ந்து நீடிக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

அபிஷேக் சர்மா

கடந்த ஆட்டத்தில் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா அதிரடியை வெளிப்படுத்தி சதம் அடித்தார். இதேபோல தொடக்க வரிசையில் வாய்ப்பு கிடைத்த இளம் வீரர் சூர்யவன்ஷியும் மிகவும் அபாரமாக செயல்பட்டார்.

சஞ்சு சாம்சன், கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், நமன் திர், திலக் வர்மா, நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோரும் பேட்டிங்கில் நல்ல நிலையில் இருக்கிறார்கள். கடந்த 3 ஆட்டத்திலும் இந்தியாவின் பேட்டிங் சிறப்பாக இருந்தது.

தொடரை கைப்பற்றிவிட்டதால் இதுவரை இடம் பெறாத வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம். ஷிவம் துபே, குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் ஒரு போட்டியில் கூட ஆடவில்லை.

முதல் வெற்றி ஆர்வம்

சான்ட்னெர் தலைமையிலான நியூசிலாந்து அணி சொந்த மண்ணில் 3 போட்டியிலும் தோற்று 20 ஓவர் தொடரை இழந்தது பரிதாபமே. அந்த அணி முதல் வெற்றிக்காக காத்திருக்கிறது.

நியூசிலாந்தின் பேட்டிங் வலுவாகவே இருக்கிறது. பந்து வீச்சு தான் மிகவும் பலவீனமாக காணப்படுகிறது. கடைசி 2 போட்டியில் நியூசிலாந்து வீரர்கள் பெர்குசன், ஹென்றி விளையாடவில்லை.

இரு அணிகளும் 20 ஓவர் போட்டியில் 34 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா 19-ல், நியூசிலாந்து 12-ல் வெற்றி பெற்றுள்ளன. 3 ஆட்டம் டை ஆனது.

மதியம் 12.30 மணி

நாளைய போட்டி இந்திய நேரப்படி மதியம் 12.30 மணிக்கு தொடங்குகிறது. சோனி ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

SCROLL FOR NEXT