இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில், இங்கிலாந்து 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
முதல் போட்டி மழையால் ரத்தாக, இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றிப் பெற்றது. இதனைத்தொடர்ந்து இன்று இரு அணிகளுக்கு இடையேயான 4வது போட்டி இன்று 10 மணிக்கு பிரிஸ்டலில் உள்ள கவுண்டி மைதானத்தில் தொடங்குகிறது.
இந்நிலையில் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இப்போட்டியில் இந்தியா தோற்றால் தொடரை இங்கிலாந்து அணி கைப்பற்றும். இப்போட்டியிலும், சனிக்கிழமை நடைபெறவுள்ள 5வது போட்டியிலும் இந்தியா வென்றால் மட்டுமே தொடர் சமனில் முடியும்.