ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்றுப் போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 2 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், இரண்டு போட்டிகளிலும் வெற்றிப்பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது இந்தியா.
இந்நிலையில் இன்று மூன்றாவது போட்டி ஹராரேவில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி பேட்டிங்களை தேர்வு செய்துள்ளது. அதன்படி ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீசுகிறது.
வைபவ் சூர்யவன்ஷி, அபிஷேக் சர்மா, ஸ்ரேயஸ் ஐயர் (கேப்டன்), திலக் வர்மா, ரிங்கு சிங், சூர்யான்ஷ் ஷெட்கே, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ரவி பிஷ்னோய், யாஷ் தாக்கூர், மயங்க் யாதவ், அசோக் சர்மா.
ஜிம்பாப்வே: பிரையன் பென்னட், பென் கர்ரன், தியோன் மியர்ஸ், சிக்கந்தர் ராசா (கேப்டன்), ரையான் பர்ல், வெஸ்லி மாதேவேரே, தடிவானாஷே மருமானி (விக்கெட் கீப்பர்), பிராட் எவன்ஸ், நியூமேன் ந்யாமூரி, வெல்லிங்டன் மசகட்சா, பிளெஸ்ஸிங் முசரபானி.