விளையாட்டு

மேற்கிந்திய தீவுக்கு எதிரான 3வது டி20 - இந்தியா பேட்டிங்!

இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டி இன்று (அக்.11) இந்தூரில் உள்ள ஹோல்கர் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இப்போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் ஷை ஹோப் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

5 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் ஷிவம் துபே மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோருக்குப் பதிலாக நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் பிரின்ஸ் யாதவ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி 3 ஒருநாள் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. ஒருநாள் தொடர் முடிவடைந்த நிலையில், தற்போது டி20 நடைபெற்று வருகிறது.

SCROLL FOR NEXT