ராய்பூரில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் ஜிம்பாப்வே மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டியில், இந்திய அணியின் வெற்றிக்கு 103 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே மகளிர் அணி, இந்திய அணியின் அபார பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு, 102 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இந்திய அணியின் வெற்றிக்கு 103 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
ஜிம்பாப்வே அணியில் அதிகபட்சமாக, சீபோ முகேரி-திரிபானோ 34 ரன்களும், கேப்டன் ஜோசபின் 27 ரன்களும் எடுத்தனர்.
இந்திய அணி தரப்பில் நிகி பிரசாத், தீப்தி சர்மா, கிராந்தி கௌத், ஸ்ரீ சரணி மற்றும் அருந்ததி ரெட்டி ஆகியோர் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி விக்கெட்டுகளை வீழ்த்தினர்.