ஷாய் ஹோப் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான 3 ஒருநாள் போட்டி தொடரில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2- வது ஒருநாள் போட்டி கவுகாத்தியில் நாளை (30-ந்தேதி) நடக்கிறது.
சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி இந்தப் போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை வெல்லும் ஆர்வத்தில் இருக்கிறது.
கடந்த ஆட்டத்தில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் இந்திய வீரர்களின் செயல்பாடு மிகவும் அபாரமாக இருந்தது.
அதே உத்வேகத்துடன் நாளைய போட்டியிலும் விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 296 ரன் இலக்கை 50 பந்துகள் எஞ்சி இருந்த நிலையில் எடுத்தது மிகவும் சிறப்பானது.
உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனும், சீனியர் வீரருமான விராட் கோலி கடந்த போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 55-வது சதத்தை பதிவு செய்தார்.
இதேபோல கேப்டன் சுப்மன் கில்லும் செஞ்சூரி அடித்து சாதித்தார். ரோகித் சர்மா, துணை கேப்டன் கே.எல்.ராகுல் ஆகியோரும் சிறப்பாக ஆடக்கூடியவர்கள்.
பந்துவீச்சில் குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். நாளைய போட்டிக்கான அணியில் மாற்றம் இருக்காது என்றே கருதப்படுகிறது.
இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் வெஸ்ட் இண்டீஸ் இருக்கிறது. ஏனென்றால் தோற்றால் ஒருநாள் தொடரை இழந்துவிடும். அந்த அணி இந்தியாவுக்கு பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்யும் வேட்கையில் உள்ளது.
முதல் போட்டியில் அதிக ரன்களை குவித்தும் தோற்றதால் பந்துவீச்சில் முன்னேற்றம் அடைய போராடும். வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்டிங்கில் ஜஸ்டின் கிரீவ்ஸ் , கேம்ப்பெல், அமீர் ஜாங்கோ ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.
இரு அணிகளும் நாளை மோதுவது 144-வது ஒரு நாள் போட்டியாகும். இதுவரை நடைபெற்ற 143 ஆட்டத்தில் இந்தியா 73- ல், வெஸ்ட் இண்டீஸ் 64-ல் வெற்றி பெற்றுள்ளன.2 போட்டி டை ஆனது. 4 ஆட்டம் முடிவு இல்லை.
நாளைய போட்டி பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் இந்த ஆட்டம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.