இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிப் பெற்றது.
அதனைத்தொடர்ந்து இன்று நடைபெறும் இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 44 ஓவர்களில் 233 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.
இந்திய தரப்பில் ஸ்ரேயாஸ் ஐயர், விராட் கோலி அரைசதம் விளாசினர். இங்கிலாந்து தரப்பில் ஆர்ச்சர், அதில் அட்கின்சன் தலா 3 விக்கெட்டுகளும், வில் ஜாக்ஸ், சாம் கரண் தலா 1 விக்கெட்டும், சாகிப் மஹ்மூத் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து இங்கிலாந்து விளையாட உள்ளது. தொடரை வெல்ல அல்லது சமன்செய்ய இப்போட்டியை நிச்சயம் இங்கிலாந்து வெல்ல வேண்டும்.