விளையாட்டு

வரலாற்றில் முதல் முறை: செஸ் தரவரிசையில் முதல் 5 இடங்களில் 2 இந்திய வீரர்கள்

குகேஷ் 2775.2 புள்ளிகளையும், எரிகைசி 2788.1 புள்ளிகளையும் பெற்றுள்ளார். மேக்னஸ் கார்ல்சன் 2832.3 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

மாலை மலர்

வரலாற்றில் முதல் முறையாக நேரடி செஸ் தரவரிசையில் முதல் 5 இடங்களில் 2 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய செஸ் வீரர்கள் அர்ஜுன் எரிகைசி மற்றும் குகேஷ் டி ஆகியோர் நேரடி செஸ் தரவரிசையில் முறையே நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களைப் பெற்றுள்ளனர்.

குகேஷ் 2775.2 புள்ளிகளையும், எரிகைசி 2788.1 புள்ளிகளையும் பெற்றுள்ளார். நேரடி செஸ் தரவரிசையில் இரண்டு இந்தியர்கள் முதல் ஐந்து இடங்களுக்குள் இருப்பது வரலாற்றில் இதுவே முதல் முறை. மேக்னஸ் கார்ல்சன் 2832.3 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்