சிவன் 
வழிபாடு

நத்தம் பகுதி சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

சுற்றுவட்டாரங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் வைகாசி மாத பிரதோஷ வழிபாடு நடந்தது. இதையொட்டி நந்திசிலைக்குபால், பழம், பன்னீர், விபூதி, சந்தனம், இளநீர், தீர்த்தம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தது. தொடர்ந்து மேளதாளம் முழங்க சுவாமி புறப்பாடும் நடந்தது. பின்னர் மூலவர் செண்பகவல்லி சமேத கைலாசநாதருக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும், தீபாராதனைகளும் நடந்தது.

இதில் சுற்றுவட்டாரங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதைப்போலவே நத்தம் அருகே குட்டூரில் உள்ள உண்ணாமலை அம்பாள் உடனுறை அண்ணாமலையார் கோவிலிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது. இதில் மூலவருக்கும், நந்திக்கும் சிறப்பு அலங்காரமும், அபிஷேகமும், தீபாராதனைகளும் நடந்தது. இங்கும் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.