சங்கர மடத்தின் ஸ்ரீ காரியம் செல்லா விஸ்வநாத சாஸ்திரி, உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
காஞ்சீபுரத்தில் உள்ள கைலாசநாதர் ஆலயத்தில் ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி அன்னாபிஷேக விழா விமரிசையாக நடைபெற்றது. இதில் மூலவர் கைலாசநாதர் அன்னம் மற்றும் காய்கறி, பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது.
இதில் காமாட்சி அம்மன் ஆலய ஸ்ரீ காரியம் சுந்தரேச ஐயர், சங்கர மடத்தின் ஸ்ரீ காரியம் செல்லா விஸ்வநாத சாஸ்திரி, உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
இதேபோல் கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வழி கிராமத்தில் உள்ள தான்தோன்றீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.