வழிபாடு

2026 வார ராசிபலன்- தனுசு, மகரம், கும்பம், மீனம்

வியாபாரத்தில் நிலவிய தேக்க நிலைமாறி நல்ல லாபம் கிட்டும்.

தனுசு

முக்கிய பணிகள் நிறைவேறும் வாரம். ராசி அதிபதி குரு அஷ்டம ஸ்தானத்தில் உச்சம் பெற்றுள்ளார். இதுவரை பட்ட சங்கடங்கள் விலகும். சாதுர்யமாக பேசி காரியம் சாதிப்பீர்கள். அரசு வழியில் உயர் பதவிகள் வகிக்கும் யோகம் உண்டாகும். சம்பள உயர்வு இடப்பெயர்ச்சிக்கு வாய்ப்புள்ளது. பொருளாதாரத்தில் தன்னிறைவு உண்டாகும். திட்டமிட்டு வெற்றி பெற குடும்ப உறவுகள் உதவுவார்கள். செல்வாக்கு, புகழ் ஆகியவை கூடும்.பிள்ளைகளால் குடும்ப வருமானம் உயரும். கடன் சுமை குறையும்.பேச்சை மூலதனமாகக் கொண்டவர்களின் தனித்திறமை மிளிரும். வியாபாரத்தில் நிலவிய தேக்க நிலைமாறி நல்ல லாபம் கிட்டும். சேமிக்கும் அளவுக்கு வருவாய் அதிகரிக்கும்.எதிர்பார்த்த பணம் கிடைப்பதால் செலவுகளைச் சமாளிப்பதில் சிரமம் எதுவும் இருக்காது. வாடகை வருமானம் தரக்கூடிய புதிய சொத்துக்கள் சேரும். இதுவரை வாடகைக்கு போகாமல் இருந்த சொத்துக்களுக்கு நல்ல வாடகை தாரர்கள் கிடைப்பார்கள். எதிரிகளை வீழ்த்தும் வல்லமை உண்டாகும். ஆடி மாதம் வெள்ளிக்கிழமை விரதம் இருந்து சந்தன அபிஷேகம் செய்து அம்மன் வழிபாடு செய்யவும்.

மகரம்

மேன்மையான வாரம். ராசிக்கு குருவின் நேரடி பார்வை உள்ளதால் தைரியம், சுறுசுறுப்பு அதி கரிக்கும். தவறாக புரிந்த உறவினர்கள் பகைமை மறப்பார்கள். அரசாங்கத்திடம் இருந்து அனுகூலமான செய்திகள் மற்றும் தகவல்கள் வந்து சேரும். பாகப்பிரி வினைக்கு உடன் பிறப்புகள் சம்மதிப்பார்கள். பிள்ளைகளுக்கு சுப விசேஷங்கள் நடத்தி மகிழ்வீர்கள். குல தெய்வ கடாட்சம், முன்னோர்களின் நல்லாசி கிட்டும். திருமணத் தடை அகலும். திருமணமான இளம்பெண்கள் கருத்தரிப்பார்கள். ஆரோக்கிய தொல்லை குறையும். வழக்குகள் வெற்றியடையும். அரசு உத்தியோக முயற்சியில் சாதகமான பலன் உண்டு. இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். ஆன்மீகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். சிலருக்கு தொழிலில் மாற்றம் ஏற்படும். தொழிலிலுக்கு சகோதரர்களின் பங்களிப்பு அதிகமாக இருக்கும். சுய ஜாதகம் அறிந்து புதிய முதலீட்டில் ஈடுபடுவது நல்லது.வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.

கும்பம்

திட்டமிட்டு செயல்பட வேண்டிய வாரம். ராசிக்கு ஏழாமிடத்தில் சூரியன் கேதுடன் சேர்கை பெறுகிறார்கள். மனதில் இனம் புரியாத கவலை அதிகரிக்கும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். பேச்சில் பய உணர்வு, இயலாமை வெளிப்படும். உறவினர்களுடன் வீண் விவாதத்தைத் தவிர்க்க வேண்டும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பேச்சில் நிதானம் தேவை. புதிய சொத்துக்கள் சேரும். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் கூடும். எதிர்பார்த்த விலைக்கே பழைய சொத்தை விற்பீர்கள். சிலரின் ஆரோக்கிய குறைபாடுகள் அறுவை சிகிச்சையில் சீராகும். திருமணம் முயற்சியில் சிந்தித்து செயல்பட வேண்டும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் ஏற்படும். காதல் சாதகமாகும். 17.8.2026 அன்று மாலை 4.19 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். பெரிய முதலீடு போன்ற புதிய முயற்சிகளை தவிர்த்து அன்றாட பணியில் மட்டும் ஈடுபடவும். ஆடி வெள்ளிக்கிழமை விரதம் இருந்து பன்னீர் அபிஷேகம் செய்து அம்மன் வழிபாடு செய்யவும்.

மீனம்

புதிய பாதையில் பயணிக்கத் துவங்கும் வாரம். ராசிக்கு தற்போது உச்ச குருவின் பார்வை இருப்பதால் மீன ராசிக்கு கிரக நிலவரம் மிக சாதகமாக உள்ளது. புதிய முயற்சிகள் வெற்றி தரும். முக்கிய காரியங்களை பணிகளை நிறைவேற்ற முடியும்.தனி அடையாளத்துடன் இருப்பீர்கள். சிந்தனைகளும் எண்ணங்களும் உயர்வானதாக இருக்கும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். திருமணம், குழந்தைப் பேறு கைகூடும். வெளிநாட்டு தொழில், உத்தியோக வாய்ப்பு கிடைக்கும். கண்ணில் உள்ள குறைபாட்டுக்கு சிகிச்சை எடுத்துக் கொள்வீர்கள். ஆயுள், ஆரோக்கியம் சார்ந்த பயம் அகலும். பிள்ளைகளுக்கு திருமணம் செய்து மருமகள், மருமகன் பேரன் பேத்தியை பார்ப்பீர்கள். சேமிக்கும் வகையில் வருமானம் உயரும். அநாவசிய செலவுகளை கட்டுப்படுத்து வீர்கள். சிலருக்கு விபரீத ராஜயோகமாக அதிர்ஷ்டமான சொத்து நகை, பணம் கிடைக்கலாம். 17.8.2026 மாலை 4.19 மணி முதல் 19.8.2026 நள்ளிரவு 2.30 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மனம், புத்தி, செயல் இவற்றால் ஒன்றுபட முடியாது. ஆடி வெள்ளிக்கிழமை லலிதா சஹஸ்ரநாமம் கேட்கவும் அல்லது படிக்கவும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406