வழிபாடு

2026 வார ராசிபலன்- தனுசு, மகரம், கும்பம், மீனம்

வியாபாரத்திற்கு புதிய முதலீடுகள் செய்யும் எண்ணம் உண்டாகும்.

தனுசு

தன்னம்பிக்கையுடன் செயல்படும் வாரம். ராசிக்கு செவ்வாய், சனி மற்றும் புதன் பார்வை உள்ளது. மனதில் நிரம்பி வழிந்த துக்கங்கள், துயரங்கள், சங்கடங்கள் விலகும். உங்களை ஏளனமாக அலட்சியமாக நினைத்தவர்கள் திரும்பி பார்க்கும் வகையில் உங்களுடைய வளர்ச்சி கூட போகிறது. வீடு மாற்றம், ஊர் மாற்றம், வேலை மாற்றம் போன்ற நல்ல விதமான மாற்றங்கள் நடக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொடர்பான தொழில் செய்பவர்களுக்கு வாய்ப்புகள் அதிகரிக்கும். தொழில் தொடர்பான வெளிநாடு, வெளி மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் செய்து மகிழ்வீர்கள். வியாபாரத்திற்கு புதிய முதலீடுகள் செய்யும் எண்ணம் உண்டாகும். தொழிலில் பெரிய சாதனையை செய்யக் கூடிய வாய்ப்புகள் தேடி வரும். வாழ்க்கையே போராட்டமாக இருந்தவர்களுக்கு சீரான தொழில் வளர்ச்சியால் மன நிம்மதியான வாழ்க்கை அமையும். ஆரோக்கியத்தில் அதிக கவனம் வைக்க வேண்டும். திருமணத் தடை அகலும். ஆடி மாத வெள்ளிக்கிழமை குல இஷ்ட தெய்வங்களை வழிபடவும்.

மகரம்

புதிய வாழ்க்கைக்கு அஸ்திவாரம் அமைக்கும் வாரம். ராசிக்கு உச்ச குருவின் சம சப்தம பார்வை உள்ளது. அக்டோபர் மாத இறுதியில் குரு அதிசாரமாக சிம்ம ராசிக்குள் செல்வார். அதுவரை முக்கிய பணிகளை திட்டம் தீட்டி செயல்படுத்தலாம். எத்தகைய சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் ஆற்றலைப் பெறுவீர்கள். மறைமுக லாபம் கிடைக்கும். பாக்கிய பலத்தால் தாராளமான வரவு செலவு, பணப்புழக்கமும் உண்டாகும். உணவுத் தொழில், ரியல் எஸ்டேட் தொழில், பங்கு வர்த்தகம், மார்க்கெட்டிங் போன்ற பணியில் இருப்பவர்களின் வருமானம் இரட்டிப்பாகும். கடன் வாங்கி, அட்வான்ஸ் வாங்கி போனசில் கடனை கழித்து வாழ்க்கையை ஓட்டிய நடுத்தர வர்க்கத்தினரின் வருமானம் உயரும். பழைய கடனை அடைத்து இஷ்ட, குல, உபாசனை தெய்வ வழிபாடு பலிதமாகும் காலம். முதல் திருமணம் தோல்வியில் முடிந்த சிலருக்கு இரண்டாவது திருமணம் நடக்கும் வாய்ப்பும் உள்ளது. ஆடி வெள்ளிக்கிழமை காவல் தெய்வங்களுக்கு வஸ்திரம் சாற்றி வழிபடவும்.

கும்பம்

பொறுப்புகள், கடமைகள் அதிகரிக்கும் வாரம். பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி புதன் ஆட்சி பலம் பெறுகிறார். பூர்வ புண்ணிய ஸ்தானம் பலம் பெறுகிறது. தெய்வானுகூலமும், அதிர்ஷ்டமும் வழி நடத்தும். குடும்பத்தில் சுப காரியப் பேச்சு வார்த்தை நடக்கும். அதிர்ஷ்டம் சார்ந்த செயல்களில் ஆர்வம் கூடும். கை விட்டு போன சொத்துக்கள் வீடு தேடி வர வாய்ப்புள்ளது. விற்று விட்ட பூர்வீக சொத்துக்களை திரும்ப வாங்க முயற்சி செய்வீர்கள். பிறரை நம்பி களத்தில் இறங்கி ஏமாற்றம் அடைந்த நீங்கள் சுய நம்பிக்கையில் இழந்தததை ஈடுகட்டுவீர்கள். இதுவரை உங்களைத் துரத்திய அவமானம், நஷ்டம், கவலைகள் விலகும். எதிர்காலத்தில் உங்கள் பெயர் பிரகாசிக்குமளவு புகழ், பெருமை, கவுரவம் சேரும். ஜனன கால ஜாதரீதியாக சாதகமான தசாபுக்திகள் நடந்தால் நன்மையின் அளவை அளவிட முடியாத வளர்ச்சி உண்டு. பொருளாதார பற்றாக்குறை அகலும். புகழ், அந்தஸ்து, ஆளுமை அதிகரிக்கும். இனம் புரியாத கவலைகள் குறையும். ஆடி வெள்ளிக்கிழமை உடல் ஊனமுற்ற வர்களுக்கு உணவு உடை தானம் வழங்கவும்.

மீனம்

ஜென்மச் சனியின் தாக்கம் குறையும் வாரம். ராசியில் உள்ள சனி பகவான் வக்கிரமடைய போகிறார். ஜென்மச் சனியின் தாக்கம் வெகுவாக குறையும். வேலையில் போட்டி, பொறாமை, இடையூறு, இன்னல்கள் இருந்தாலும் சமாளித்து விடுவீர்கள். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். நல்லார் உறவும், நண்பர்கள் ஆதரவும் உறவினர்கள், ஒத்துழைப்பும் அமோகமாக அமையும். முக்கிய பணிகளில் சிந்தித்து செயல்பட வேண்டும். புதிய தொழில் தொடர்பான சிந்தனை அதிகரிக்கும். தொழிலில் அதிகமாக கடன் கொடுப்பதையும், பெறுவதையும் தவிர்க்க வேண்டும். யாருக்கும் ஜாமீன் போடாமல் இருப்பது நல்லது. முக்கிய ஆவணங்களை கவனமாக கையாள வேண்டும். புனித நீராடல், புனித தல யாத்திரை சென்று வர வாய்ப்பு கிடைக்கும். கல்வி சார்ந்த விசயங்களில் ஏற்பட்ட தடை அகலும். குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் இல்லம் திரும்புவார்கள். கட்சி மேலிடத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். ஆடி வெள்ளிக்கிழமை புனித நீர்நிலைகளில் நீராடவும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406