வழிபாடு

2026 வார ராசிபலன்- தனுசு, மகரம், கும்பம், மீனம்

திருமணப் பேச்சுவார்த்தை சுபமாக முடியும்.

தனுசு

சாதகமும் பாதகமும் கலந்த வாரம். ராசி அதிபதி குரு பகவான் செவ்வாயுடன் இணைந்து ஒன்பதாம் இடமான பாக்கியஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார்.குடும்ப ஸ்தானத்தில் ராகு நிற்பதால் யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம். அஷ்டம ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் வேலை மாற்றம் மற்றும் இடமாற்றம் கவலையைத் தரும்.பிள்ளைகளால் ஏற்பட்ட மனக்கவலை அகலும். குழந்தை இல்லாதவர்களுக்கு வாரிசு உண்டாகும். திருமணப் பேச்சுவார்த்தை சுபமாக முடியும். சத்ருக்கள் தொல்லை அகலும். கடன் வாங்குவதை தவிர்த்தல் நலம். வேளாண்மை தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.உங்கள் ராசிக்கு இது அர்தாஷ்டமச் சனியின் காலம் என்பதால் புதிய தொழில் முதலீடுகளில் நிதானித்து செயல்பட வேண்டும். வீடு, வாகனம் போன்ற சுபச் செலவு ஏற்படலாம். உடன் பிறந்த சகோதர, சகோதரிகள் ஒன்றுகூடி மகிழ்வீர்கள். வயதானவர்களுக்கு முழங்கால் வலி, மூட்டு வலி போன்ற உடல் உபாதைகள் கட்டுக்குள் இருக்கும். 30.11.2026 அன்று காலை 9.42 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பேச்சைக் குறைக்கவும். காது,மூக்கு, தொண்டை தொடர்பான உடல் உபாதைகள் சிரமம் தரும். சிலருக்கு கடன் பிரச்சனை அதிகரிக்கலாம். பழநி முருகனை வழிபடவும்.

மகரம்

சிந்தித்து செயல்பட வேண்டிய வாரம். ராசிக்குள் ராகு பகவான் நுழைந்து விட்டார்.மாறுபட்ட கோணத்தில் சிந்தித்து பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்துவீர்கள். நிறைய பணம் வரும். ஆனால் கையில் பணம் தங்காது. ராகு அள்ளிக் கொடுக்கும் பணத்தை கேது அளவில்லாத செலவை கொடுத்து சேமிப்பை கரைப்பார். குடும்ப உறுப்பினர்கள், உடன் பிறந்தவர்கள், உறவினர்கள், நண்பர்களின் எதிர்பாராத பொருளாதார தேவையை நிறைவு செய்ய அதிக பண உதவி செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். திருமணம் சற்று காலதாமதமாகும். இளம் தம்பதியினருக்கு கருத்து வேறுபாடு வரலாம். தொழில் கூட்டாளிகளால் பணப் பரிவர்தனையில் கருத்து வேறுபாடு எற்படும். எனவே கவனத்துடன் செயல்பட வேண்டும். 30.11.2026 அன்று காலை 9.42 முதல் 2.12.2026 அன்று பகல் 2.59 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் முக்கியமான செயல்களைத் தெளிவாக திட்டமிட்டு செய்வதன் மூலம் மதிப்பு கூடும்.புதிய முயற்சிகளில் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். மேலும் பல பாக்கியங்களை அடைய மகாலட்சுமியை வழிபடவும்.

கும்பம்

நிம்மதியான வாரம். ராசிக்கு குரு மற்றும் செவ்வாயின் பார்வை உள்ளது. ராசியை விட்டு ராகு பகவான் வெளியேறி விட்டார். மனப்போராட்டங்கள் விலகும். மனக்கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும். திறமைகளின் மூலம் பணியில் பொறுப்புகள் உயரும். சமூகச்சேவை புரிபவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். நன்மைகளே மிகுதியாக நடக்கும், எனினும் 2ல் சனி பகவான் வக்ரமாக இருப்பதால் சொல்லாலும் செயலாலும் ஒன்றுபட வேண்டும். வாகன வசதிகள் மேம்படும். புதிய பொருட்சேர்க்கை மகிழ்ச்சி தரும். உறவினர்களின் மூலம் ஆதரவான சூழல் ஏற்படும். திருமணத்தடை அகலும். 2.12.2026 அன்று பகல் 2.59 முதல் 4.12.2026 அன்று இரவு 11.03 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் அயராத உழைப்பும் மற்றும் தீவிர முயற்சியால் மட்டுமே சாதகமான பலனை அடைய முடியும். பெண்களுக்கு அதீத வேலை பளுவால் களைப்பு அதிகரிக்கும். மன அழுத்தத்திற்கு அது முக்கிய காரணமாக இருக்கும். காவல் தெய்வங்களை சரணாகதியடைந்து வழிபட கடன், உத்தியோகம், நோய் தொடர்பான பிரச்சனைகள் இருந்த சுவடு தெரியாது.

மீனம்

சீரிய எண்ணங்கள் மேலோங்கும் வாரம். பஞ்சம ஸ்தானத்தில் கேது பகவான் லாப ஸ்தானத்தில் ராகு பகவானும் சஞ்சரிக்கிறார்கள். அடுத்த ஒன்றரை ஆண்டு காலங்கள் மீன ராசியினருக்கு பண வரவு அதிகரித்து கடன் நோய் சார்ந்த பாதிப்புகள் அகலும். ஆன்மீக வழிபாட்டில் மனம் ஈடுபடும். ஒரு சிலர் பூர்வீக சொத்து தொடர்பான வழக்குகளை சந்திக்க நேரும். மன நிம்மதியை அதிகரிக்க வாக்குவாதங்களை தவிர்க்கவும். மலைபோல் வந்த துன்பம் பனி போல விலகும். எதிர்பாராத செலவுகளால் நெருக்கடியான சூழல் ஏற்பட்டாலும் சமாளித்து விடுவீர்கள். தொழில் தொடர்பாக அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உறவுகளிடம் அமைதிப் போக்கினை கையாளவும். நண்பர்களிடம் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பம் பற்றிய கவலையால் மனச்சோர்வு உண்டாகும். 4.12.2026 அன்று இரவு 11.03க்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் தம்பதிகள் தங்கள் பிரச்சினைகளை மூன்றாம் நபரிடம் கொண்டு செல்லாமல் தாங்களே தீர்த்துக் கொள்வதால் ஊடல் கூடலாகும். சில சட்ட ஆலோசனை பெறுவதற்கு இந்த வாரம் வக்கீலை சந்திப்பீர்கள். தினமும் ராகு காலத்தில் ஸ்ரீ சரபேஸ்வரரை வழிபடவும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

SCROLL FOR NEXT