நிம்மதியான வாரம். ராசி அதிபதி குரு பகவான் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி செவ்வாயுடன் இணைந்து ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இது குரு மங்கள யோகமாகும்.மனிதன் பிறக்கும் போது பிரச்சினையும் உடன் பிறந்தது என்பதால் கடவுள் நம்பிக்கையுடன் சந்தோசமாக வாழ விரும்புவீர்கள். தொழில் மற்றும் உத்தியோக விசயமாக குடும்பத்தை பிரிந்து செல்ல நேரும். வேற்று மத, இன அல்லது மொழி பேசுபவர்க ளின் நட்பு கிடைக்கும். அந்திய மொழியை கற்பதில் ஆர்வம் அதிக மாகும். மாறுபட்ட கோணத்தில் சிந்தித்து பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள். நிறைய பணம் வரும். ஆனால் கையில் பணம் தங்காது. குடும்ப உறுப்பினர்கள், உடன் பிறந்தவர்கள், உறவினர்கள், நண்பர்களின் எதிர்பாராத பொருளாதார தேவையை நிறைவு செய்ய அதிக பண உதவி செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். அடிக்கடி மின்சா தனங்கள் பழுதாகி வீண் விரயங்கள் உண்டாகும். பொது நலச் சேவையில் ஆர்வம் அதிகரிக்கும். குடும்ப விஷயத்தை பொது இடங்களில் பேசாமல் இருந்தால் பெரிய பாதிப்புகள் வராது ஆஞ்சநேயரை வழிபட தீவினைகள் அண்டாது.
மனப்பக்குவத்தை அதிகரிக்க வேண்டிய வாரம். ராசியை ராகு பகவான் நெருங்கி வந்து கொண்டிருக்கிறார். ராகு ராசியை நெருங்குவதால் திருமணம் சற்று காலதாமத மாகும். திருமணமான தம்பதியினருக்கு கருத்து வேறுபாடு மனப்போராட்டம் மிகுதியாகும். கூட்டாளிகளிடம் பணப் பரிவர்தனையில் கருத்து வேறுபாடு ஏற்படும். கூட்டு தொழில் மற்றும் புதிய தொழில் ஒப்பந்தங்களில் கவனத்துடன் செயல்பட வேண்டும். குழந்தைகளின் படிப்பு, திருமணம் வீடு, வாகன செலவு என வாழ்க்கைக்கு அனைத்து தேவைகளையும் நிறைவு செய்து மகிழ்வீர்கள். வயது முதிர்ந்தவர்கள் மருத்துவமனையில் தங்கி வைத்தியம் செய்ய நேரும். எது எப்படி இருந்தாலும் படுத்தவுடன் நிம்மதியான தூக்கம் வரும். ஜோதிடம், மாந்தரீகம், தியானம், அக்குபஞ்சர் மற்றும் இயற்கை மருத்துவம் கற்க ஆர்வம் உண்டாகும். சிவ வழிபாடு செய்வதால் குடும்பத்தில் நிம்மதி கூடும்.
வாழ்வியல் மாற்றம் நடக்கும் வாரம். இதுவரை ராசியிலிருந்து துக்கத்தையும் துயரத்தையும் வழங்கிய ராகு பகவான் ராசியை விட்டு விலகப் போகிறார்.பெரும் வாழ்வியல் மாற்றம் நடக்கும். எண்ணங்கள் கனவுகள் லட்சியங்கள் நிறைவேறும். வாழ்க்கையில் நடந்த குழப்பங்களும் துயரங்களும் விலகும். கணவன் மனைவி நெருக்கம் அதிகரிக்கும். பூர்வீகச் சொத்துக்க ளின் நிலவிய குழப்பங்கள் சாதகமாகும். அபார வளர்ச்சி சாத்தியமாகும். உங்களின் அனைத்து தேவைகளையும் பட்டியலிட்டு ஒவ்வொன்றாக நிறைவு செய்யப் போகிறீர்கள். ஆயுள் ஆரோக்கியம் அதிகரிக்கும். வட்டிக்கு வட்டி கட்டி மீள முடியாத கடன் பிரச்சினையில் இருப்பவர்களுக்கு கடன் தொகை தள்ளுபடியாகும். அதிர்ஷ்டம், உயில் சொத்து காப்பீட்டு முதிர் தொகை போன்றவற்றின் மூலம் தன லாபங்கள் ஏற்படும். ஸ்ரீ ராமரை பட்டாபிஷேக கோலத்தில் வழிபட வளமான பலன்களைப் பெற முடியும்.
விழிப்புடன் செயல்பட வேண்டிய வாரம். ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவானுக்கு செவ்வாயின் எட்டாம் பார்வையில் உள்ளது. எதையும் முறையாக திட்டமிட்டு செய்ய முடியாது. நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாகவே இருக்கும். விரக்தி அதிகமாகும். இந்த காலகட்டத்தில் யாருக்கும் பணம் கடன் கொடுத்தாலோ அல்லது பண உதவி செய்தாலோ திரும்ப கிடைக்காது. முதல் திருமணத்தில் தோல்வி அடைந்தவர்களுக்கு மறு விவாகம் நடக்கும். அதிர்ஷ்டத்தின் மீது நம்பிக்கை அதிகரிக்கும் தடைப்பட்ட பிரச்சினைகளுக்கு முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம். இதனால் பணவரவில் தடை தாமதம் வரலாம். குடும்ப உறுப்பினர்கள் பேசியே காயப்படுத்துவர்கள். தவறான உங்களது பேச்சால் குடும்பத்தில் சங்கடங்கள் அதிகமாகும். சிலர் சொற்ப சம்பளத்திற்காக குடும்பத்தைப் பிரிந்து வெகு தொலைவில் வாழ்வார்கள். உழைப்பிற்கான கூலி உடனே கிடைக்காது. கோட்சார கிரகங்கள் பின் முரணான பலன்களை வழங்கும் வாய்ப்பு உள்ளதால் இறை நம்பிக்கை மிக அவசியம். காவல் தெய்வ வழி பாட்டு மூலம் அதிக நற்பலன்களை அடைய முடியும்.