விரும்பிய மாற்றங்கள் தேடிவரும் வாரம். தன ஸ்தானத்திற்கு குருப் பார்வை இருப்பதால் சொத்து, வாகன வசதி மேம்படும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகள் தேடிவரும். மனதில் நம்பிக்கையும் உறுதியும் அதிகரிக்கும். கூட்டாளிகளுடன் இணைந்து புதிய தொழில் கிளைகள் துவங்கலாம். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். அரசாங்க பணிகள் விரைந்து முடியும். தந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பெண்களுக்கு கணவர் விலை உயர்ந்த அன்பளிப்பு வழங்குவார். பெற்றோர்கள் பிரச்சனையை பிள்ளைகள் முன் விவாதிப்பதை தவிர்க்கவும். தவணை முறைத் திட்டத்தில் வீட்டு மனை அல்லது தோட்டம் வாங்குவீர்கள். 4.10.2026 அன்று மாலை 6.32 முதல் 6.10.2026 இரவு 10.17 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் இயல்பான பணியில் விழிப்புணர்வுடன் செயல்பட்டால் பெரிய இழப்புகள் ஏற்படாது. சிலருக்கு ஞாப சக்தி குறையும். தேவையற்ற, அலைச்சல். பயணங்கள் அதிகரிக்கும். மஹாளய அமாவாசை அன்று பெற்றோர்கள் பெரியோர்கள் முன்னோர்களின் நல்லாசிகளை பெறவும்.
அனுகூலமான வாரம். ராசிக்கு குரு மற்றும் செவ்வாயின் பார்வை உள்ளது.பூர்வீக சொத்து தொடர்பான விஷயங்களை ஒத்தி வைப்பது நல்லது.வாழ்க்கைத் துணை நண்பர்களின் உதவியால் சில முக்கிய பணிகளை செய்து முடிப்பீர்கள். வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். விஐபிக்கள் தொடர்பால் சில பிரச்சனைகள் முடிவுக்கு வரும். என்றோ, எப்போதோ வாங்கிப் போட்ட இடத்தில் இப்பொழுது கடன் பெற்று வீடு கட்டுவீர்கள்.தொழிலில் ஏற்றம் அதிகரிக்கும். ஆனால் வேலைப் பளு அதிகரிக்கும். நீண்ட நாட்களாக தடைப்பட்டு வந்த முக்கிய பணிகளை இந்த வாரம் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். சிலர் பழைய வேலையை விட்டு புதிய வேலை தேடலாம். 6.10.2026 இரவு 10.17 முதல் 9.10.2026 அதிகாலை 3.18 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் தம்பதிகள் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். நண்பர்கள் கூட்டாளிகளிடம் கொடுக்கல், வாங்கலில் நிதானமாக செயல்படவும். சிலருக்கு கோட்சார ரீதியான திருமணத் தடை நீடிக்கும். நோய், போட்டி பொறாமை பாதிப்பு, கண் திருஷ்டி தோஷம் போன்ற பாதிப்புகள் வரலாம். பண விசயத்தில் சிக்கனமாக இருப்பது நல்லது. மஹாளயஅமாவாசை அன்று பராமரிப்பு இல்லாத கோவிலுக்கு தேவையான மின் சாதனங்களை வழங்கவும்.
யோகமான பலன்கள் நடக்கும் வாரம். ராசியில் சஞ்சரிக்கும் ராகு பகவான் ஓரிரு மாதங்களில் 12ம்மிடம் செல்ல போகிறார். இதனால் ஏற்படக்கூடிய நல்ல மாற்றங்களுக்கான பலன்கள் தற்போது உங்களுக்கு தெரிய துவங்கும். குடும்பத்தில் நிலவிய போட்டி, போராட்டம், மனக்கசப்பு, சங்கடங்கள் விலகும். ஆன்லைன் வர்த்தகம், தகவல் தொடர்பு துறை, ஊடகங்களில் பணிபுரிபவர்கள், கமிஷன் தொழில் புரிபவர்களுக்கு வருமானம் இரட்டிப்பாகும். வராக்கடன்கள் வசூலாகும். சிலர் குடியிருப்புகளை லீசுக்கு விடலாம். சொந்த வீட்டுக் கனவை பிள்ளைகள் நினைவாக்குவார்கள். சிலர் வீடு மாற்றம், வேலை மாற்றம் செய்ய வாய்ப்பு உள்ளது. காதல் வாழ்க்கை திருமண வாழ்க்கையாக மாறும். குலதெய்வ குற்றம் அகலும். தாய்வழி உறவுகளால் ஏற்பட்ட மனச் சங்கடம் மறையும். 9.10.2026 அன்று அதிகாலை 3.18க்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் முக்கியப் பணிகளை ஒத்தி வைக்கவும். பண விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. தேவையற்ற வாக்குவாதம், வாக்குறுதியை தவிர்ப்பது நல்லது. உடல் நலனில் கவனம் தேவை. மஹாளய அமாவாசை அன்று வயது முதிர்ந்தவர்களின் தேவை அறிந்து உதவவும்.
திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும் வாரம். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராசி அதிபதி குருவின் ஒன்பதாம் பார்வை ராசியில் சஞ்சரிக்கும் சனியின் மேல் பதிகிறது. திடீர் அதிர்ஷ்டமும் சுப விரயமும் ஏற்படும். அதிர்ஷ்ட பணம் உயில் சொத்து கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. சில ரியல் எஸ்டேட் தாரர்களுக்கு அரசுத் துறை நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. புதிய வாகனம் வாங்கலாம். நிச்சயித்த திருமணத்தை தள்ளிப்போடாமல் ஐப்பசியில் உடனே நடத்துவது நல்லது. குடும்பத்தில் கடந்த கால நிகழ்வுகளால் நிலவிய மனக்கசப்புகள் மறையும். தொழில் துறை, வேலை உத்தியோகத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகளும் திட்டங்களும் பலிதமாகும். சிலருக்கு வேலையில் மாற்றம் உண்டாகும். வெளிநாடு முயற்சியில் முன்னேற்றம் உண்டு. சிலர் வீட்டை பழுது நீக்கம் செய்யலாம். புத்திர பாக்கியம் உண்டாகும். பார்த்துச் சென்ற வரனிடம் இருந்து சாதமான பதில் வரும். ஆன்மீகம் சார்ந்த ஆர்வம் அதிகம் ஏற்படும். முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும். மஹாளய அமாவாசை அன்று கோவில் உலவாரப் பணிகளை செய்யவும்.