வழிபாடு

2026 வார ராசிபலன்- தனுசு, மகரம், கும்பம், மீனம்

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற நிலை மறையும்.

தனுசு

குடும்ப சுமை குறையும் வாரம். தன ஸ்தானத்திற்கும் குரு, செவ்வாய் பார்வை உள்ளது. உங்கள் முயற்சியால் வெற்றியும், சாதனையும் படைப்பீர்கள். கொடுக்கல் வாங்கல் சுமூகமாக நடைபெறும். பொருளாதார நிலை சீராகும். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற நிலை மறையும். ஜாமீன் இஎம்ஐ கடன் சார்ந்த விஷயங்களில் நிலவிய பிரச்சினைகள் சீராகும். சமுதாயத்தில் புகழ், அந்தஸ்து நல்ல பெயர் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆலோசனைகளைக் கேட்டு நடந்தால் எளிதில் பணி உயர்வு கிடைக்கும். தொழில் விறுவிறுப்பு அடையும். தொழிலுக்காக வாங்கிய கடனை சிறிது சிறிதாக அடைக்க முயற்சிப்பீர்கள். வேலைப்பளுவும் கூடும். பெண்களின் புத்தி சாதுர்யத்தால் குடும்பத்தில் அமைதி நிலவும். தாய், தந்தை, உடன் பிறந்தவர்கள் மற்றும் பிள்ளைகளால் பெருமை சேரும். சிலர் அழகு, அந்தஸ்து, ஆடம்பரம் நிறைந்த அப்பார்மென்ட் வீடு வாங்குவீர்கள். பௌர்ணமி அன்று விரதம் இருந்து கிருஷ்ணருக்கு அவல் பாயாசம் செய்து வழிபடவும்.

மகரம்

தொழில் வளம் சிறக்கும் வாரம். ராசிக்கு செவ்வாய் குரு பார்வை உள்ளதால் குரு மங்கள யோகம் உண்டாகுகிறது. சமூக அந்தஸ்து ராஜ மரியாதை கிடைக்கும். முயற்சிகளில் முன்னேற்றமும் வெற்றியும் உண்டாகும். வாக்கு சாதுர்யத்தால் தொழிலில் நல்ல வருமானம் உண்டாகும். அலுவலக டென்ஷன் குறையும். சிறு கடன் சுமை இருந்தாலும் கடன்காரர்களின் கெடுபிடி குறையும். வராக்கடன்கள் வசூலாகும். புதிய வாகனம் வாங்கி மகிழ்வீர்கள். விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்களுக்கு ஏற்றமான காலம். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். பெண்களுக்கு இந்த வாரம் செலவுகள் அதிகரிக்கும். அதற்குக் தகுந்த வரவும் இருப்பதால் சமாளித்து விடுவீர்கள். பெரிய அளவில் முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்த்து விடவும். மைத்துனரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மறையும். நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். பௌர்ணமி விரதம் இருந்து ஆஞ்சநேயரை வழிபடவும்.

கும்பம்

எதிலும் நிதானமும் எச்சரிக்தையும் தேவை. ராசியில் உள்ள ராகுவிற்கு செவ்வாயின் 8ம் பார்வை உள்ளது. கண் திருஷ்டி, போட்டி, பொறாமை போன்றவற்றால் வைத்தியச் செலவு உருவாகும். கடன் பிரச்சினைகளால், குடும்ப உறுப்பினர்கள் பற்றிய கவலையால் மனச்சோர்வு உண்டாகும். தம்பதிகள் தங்கள் பிரச்சினைகளை மூன்றாம் நபரிடம் கொண்டு செல்லாமல் தாங்களே தீர்த்துக் கொண்டால் ஊடல் கூடலாகும். சிறு சிறு உடல் உபாதைகள் தோன்றி மறையும். உத்தியோகஸ்தர்கள் மற்றவர்களின் பணிகளையும் சேர்த்து பார்க்க நேரிடும். வெளியூர், வெளிநாட்டு வேலை அல்லது குடியுரிமை பெற்று செட்டிலாவது போன்ற பலன்கள் கிடைக்கும். குல தெய்வத்தின் பரிபூரண அருள் கிடைக்கும். திருமண முயற்சிகள் நல்ல முன்னேற்றம் தரும். சிலர் சகோதர, சகோதரிகளுக்காக பணம் செலவு செய்ய நேரும். உடல் அசதி, அசவுகரியம் மற்றும் பொருள் விரயத்திலிருந்து விடுபட பௌர்ணமி அன்று துர்க்கை காளியை வழிபடவும்.

மீனம்

மனநிறைவும், நிம்மதியும் அதிகரிக்கும் வாரம். ராசி அதிபதி குரு பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் நீச்ச பங்க ராஜயோகம் பெற்ற செவ்வாயுடன் சேர்க்கை பெற்றுள்ளார். ராசிக்கு குரு பார்வை இருப்பதால் வசீகரமான தோற்றம் ஏற்படும். வீடு மாற்றம், வேலை மாற்றம் என இடப்பெயர்ச்சியால் மகிழ்ச்சியும் மன அமைதியும் உண்டாகும். அரசு வேலை முயற்சி சாதகமாகும். கூட்டாளிகளிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மறையும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். அங்காளி பங்காளி வகையில் நிலவிய மனக்கசப்புகள் விலகும். வீடு, வாகனம், அலங்கார ஆடம்பர பொருட்கள், உயர் ரக ஆடைகள் நகைகள் என வாழ்க்கையை அனுபவிப்பீர்கள். புகுந்த வீட்டாருடன் நிலவிய கருத்து வேறுபாடுகள் மறையும். திருமணத்தடைகள் அகலும். சிலருக்கு மறுமணம் நடக்கும். தாயின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பௌர்ணமி அன்று விரதம் இருந்து சித்தர்களை ஜீவசமாதியில் வழிபடவும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

SCROLL FOR NEXT